மண்ணை மூலமாகக் கொண்டு
மண்பாண்டங்கள் செய்தால்
அது எனக்கு பயன்படும்
தன்னை மூலமாகக் கொண்டு
என்னைப்படைத்தாயே இதில்
உனக்கு என்ன பயன் ?
தான் இன்புறுவது பிறர்
இன்புறககானவா? அபோது
நான் துன்புறுவதும் நீ
துன்புறுவது தானே இந்த
உன் திருவிளையாடல்
என்னை திருத்தி உன்னை
அடைவதென்றால் நான் படும்
துன்பமும் இன்பமே அன்றி
வேறென்ன சொல்ல இறைவா
பட்டது போதும் என்னுடைய
பொருளை நான் பாது காக்கிறேன்
என்னைக்காக்க உன் அருள் வேண்டும்
தாமதிப்பது உன் கருணை என்றால்
தாயுமானவன் தயங்குவது ஏனோ
உன்னை உண்ணும் உணர்வையாவது
நல்குவாயாக நலமுடன் வாழ



